விவகாரத்து பெற்ற பெண்ணிடம் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்திய நபர்! இரவில் பேசுவதாக அழைத்து செய்த கொடூரம்.... ரூ.1000 நீல நிற ட்ரம்பில் ஒளிந்திருந்த மர்மம்! திடுக்கிடும் பின்னணி..!!!
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் மேம்பாலம் அருகே உள்ள புதரில் பிளாஸ்டிக் டிரம்மில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் ஜான்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி நேஹா என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட காதலன் விராட் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் தொடர்பில் ஏற்பட்ட மோதல்
தகவலின்படி, சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நேஹா பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த காலகட்டத்தில் பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விராட்டுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேஹா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த மே 25-ஆம் தேதி இரவு பேச்சுவார்த்தைக்காக நேஹாவை தனது அறைக்கு அழைத்த விராட், அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டிரம்மில் உடலை மறைத்து வீசிய குற்றவாளி
கொலைக்குப் பிறகு தடயங்களை மறைக்க முயன்ற விராட், சந்தையில் இருந்து ரூ.1,000 கொடுத்து புதிய பிளாஸ்டிக் டிரம் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் அதற்குள் நேஹாவின் உடலை வைத்து மூடியுள்ளார்.
அதன்பின் நள்ளிரவில் இ-ரிக்ஷா ஒன்றை வாடகைக்கு எடுத்து, டிரம்மில் குப்பை இருப்பதாக ஓட்டுநரிடம் கூறி சர்ஹத் பைபாஸ் மேம்பாலம் அருகேயுள்ள புதரில் அதை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் காலை துப்புரவுப் பணியாளர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனர்.
மொபைல் அழைப்பு விவரங்கள் மூலம் துப்பு
ஆரம்பத்தில் சடலத்தின் அடையாளம் தெரியாததால், போலீசார் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தகவல் சேகரித்தனர். அதை பார்த்த நேஹாவின் சகோதரர் உடலை அடையாளம் காட்டினார்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விராட் தான் நேஹாவுடன் கடைசியாக தொலைபேசியில் பேசிய நபர் என்பது உறுதியானது. அவரது மொபைல் அழைப்பு விவரங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் நடத்தினர். உத்தரப் பிரதேசத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற விராட்டை பேருந்து நிலையத்தில் சுற்றிவளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.