ஓடும் எலக்ட்ரிக் டிரெயினில் எருமை மாட்டை ஏற்றிய இளைஞன்.! பரபரப்பாகும் வைரல் வீடியோ!

இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் முக்கிய போக்குவரத்துக்கு சாதனங்களில் ஒன்றாக திகழ்கிறது ரயில் போக்குவரத்துக்கு.
தினமும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்லவும், வீடு திரும்பவும் ரயில் போக்குவரத்துக்கு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. மக்கள் கூட்டம் நிறைந்த இந்த காலகட்டத்தில் ரயிலில் நின்றுகொண்டுபோவதற்கு கூட இடம் கிடைப்பதில்லை.
அதிலும் சிலர், கூட்டம் நிறைந்த ரயில்களில் சில நேரங்களில் தங்களின் வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை போன்ற விலங்குகளை ரயில் உள்ளே கொண்டுவந்து மற்றவர்களுக்கு தொந்தரவு தருவது வழக்கமான ஓன்று. ஆனால், இங்கு நபர் ஒருவர் ரயிலில் எருமை மாட்டை கொண்டுவந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள புறநகர் ரயிலில் ஏறிய நபர் ஒருவர், தன்னுடன் சேர்த்து எருமை மாட்டையும் ரயிலில் ஏற்றியுள்ளார். ரயிலில் ஏறிய எருமை மாட்டை அருகில் இருந்த இருக்கையில் கட்டிபோட்டுவிட்டு அவரும் அருகில் நின்றுகொண்டு பயணம் செய்துள்ளார். இந்த காட்சி அங்கிருந்தவர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகவிருக்கிறது.