இந்தியா

புகைப்படம்: இந்திய ராணுவ தாக்குதலின் ஆதாரத்தை வெளியிட்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரி

Summary:

pakistan army released the evidence of indian attack

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.30 அளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குல் நடத்தி இருக்கிறது. இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதிக்குள் புகுந்த இந்தியா ராணுவத்தின் போர்ப்படை விமானம் இந்த அதிரடி தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் அங்கு இருந்த இரண்டுக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.

மொத்தம் 1000 கிலோ எடைகொண்ட வெடிப்பொருட்கள் மூலம் தாக்குதல் நடத்தினோம் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் உண்டாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கான புகைப்பட ஆதாரங்களை பாகிஸ்தான் இராணுவ அதிகாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


Advertisement