தலைநகரில் பேரதிர்ச்சி.. களமிறங்கிய மனித உரிமைகள் ஆணையம்.. அதிரடி உத்தரவு.!



Over 800 People Go Missing in Delhi National Human Rights Commission Issues Notice 

தலைநகர் டெல்லியில் 191 சிறார்கள் உட்பட 807 பேர் மாயமானதாக கூறப்படும் விவகாரத்தில், இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டெல்லி அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

800 பேர் மாயம்:

கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் 800க்கும் மேற்பட்டோர் மாயமானதாகக் கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்த சம்பவம் மனித உரிமைகள் மீறல் தொடர்பான தீவிரமான சிக்கல்களை உருவாக்கக்கூடும் என ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: இரவில் தவெக தலைவர் விஜய்க்கு வந்த அதிர்ச்சி செய்தி! 6 முதல் 7 மணி நேரம்....தமிழக அரசியலில் ஒரே பரபரப்பு!

அதிரடி உத்தரவு:

மாயமான 807 பேரில் 191 சிறார்கள் மற்றும் 616 பெரியவர்கள் உள்ளனர். இதுவரை காவல்துறையினர் 235 பேரை மட்டுமே கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 572 பேர் இன்னும் காணாமல் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வுக்காக இரண்டு வாரங்களுக்குள் டெல்லி மாநகர தலைமை செயலாளர் மற்றும் டெல்லி காவல் ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

delhi

மனித உரிமை மீறல்:

பிப்ரவரி 5ல் வெளியான அறிக்கையின் படி, கடந்த 2025-ம் ஆண்டில் டெல்லியில் மொத்தம் 24,508 பேர் மாயமானதாக புகார் அளித்தனர். அதில் 60% பேர் பெண்கள் என்றும், காணாமல் போனவர்களில் 15,421 பேரை காவல்துறையால் கண்டுபிடிக்க முடிந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், பலர் மாயமாகி இருப்பது உறுதி செய்யப்பட்டால், அது தீவிர மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை எழுப்பும். எனவே, சம்பவத்தின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த விசாரணையை தீவிரமாக கவனித்து வருவதாகவும், தொடர்புடைய அதிகாரிகள் இரு வாரங்களுக்குள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: Microplastic in Water Bottles: பாட்டில் தண்ணீரில் பிளாஸ்டிக்.. சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!