கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டி! தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் அனைவரையும் அதிர வைத்த ஆச்சர்யம்!!old lady wake up minutes before cremation in maharasthra

கொரோனா பாதிப்பால் இறந்த வயதான மூதாட்டி இறுதி சடங்கின் போது திடீரென எழுந்து அமர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவை சேர்ந்தவர் 76 வயது நிறைந்த சகுந்தலா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார். 

 ஆனால் சில நாட்களில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த  நிலையில் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு படுக்கை தட்டுப்பாட்டால் மூதாட்டிக்கு படுக்கை கிடைக்க தாமதமாகியுள்ளது. இந்தநிலையில் அந்த மூதாட்டி சுயநினைவை இழந்து உடல் அசைவற்று கிடந்துள்ளார்.

old lady

இந்த நிலையில் அந்த மூதாட்டி உயிரிழந்துவிட்டதாக எண்ணி அவரது குடும்பத்தினர்கள் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். பின்னர் மூதாட்டியை பாடையில் வைத்து தகனம் செய்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த மூதாட்டி எழுந்து அமர்ந்து அழுதுள்ளார். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் மூதாட்டியின் குடும்பத்தார்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.