
#Breaking: டிச. 25 முதல் ஜன. 2 வரை ஊரடங்கு..! கிருஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முற்றிலும் தடை..!
ஒடிசா மாநில அரசு புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க டிச. 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை கீழ்காணும் தடைகள் ஒடிசா மாநிலத்தில் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சமூகக் கூட்டங்கள், பேரணிகள், ஆர்கெஸ்ட்ராக்கள், ஹோட்டல்கள், கிளப்புகள், உணவகங்கள், பூங்காக்கள் போன்றவற்றால் கொண்டாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கிருத்துவ தேவாலயங்களில் அதிகபட்சமாக 50 பேருடன் மட்டுமே வழிபாடுகள் நடைபெற வேண்டும். இறந்த நபர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் கொரோனா வழிகாட்டுதல் கடைபிடிக்க வேண்டும். அரசின் உத்தரவுகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement