தந்தை திடீர் மரணம்.! இறுதி சடங்கில் பங்கேற்கப்போவதில்லை.! முதல்வர் கூறிய நெகிழ வைத்த காரணம்.!

Not attending father funeral UP CM says


Not attending father funeral UP CM says

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் குறைபாடு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் பிஷ்த் சிங்(89) நேற்று காலை காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகள் ஹரித்வாரில் இன்று நடக்கிறது. இந்நிலையில் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளப்போவதில்லை என  உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதுபற்றி கூறியுள்ளார் அவர்.

Yogi Adhithyanath

அதிகரித்துவரும் கொரோனா காரணமாக உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்  தீவிரமடைந்துள்ளது. தான் அதில் தீவிர கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு சமயத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகளை பின்பற்றி இறுதி சடங்கை நடத்தவேண்டும் என தனது தாயிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தை இறந்து, அவரது இறுதி சடங்கில் கூட கலந்துகொள்ளாமல் கொரோனா பணியாற்றிவரும் முதல்வரின் செயல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.