இந்திய வானில் தோன்றிய மர்ம வெளிச்சம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அதிகாரிகள்..! இப்பதான் நிம்மதியா இருக்கு..!North India Mystery Light Explained by Defense Team Confirm Its Satellite

வடமாநிலங்களில் தென்பட்ட மர்ம வெளிச்சம் சாட்டிலைட் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதன் வானியல், புவியின் அண்டை கோள்கள், பிற கிரகங்கள், பால்வழி அண்டம் குறித்து தொடர் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறான். இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாக வானில் விண்வெளி நிலையங்களை அமைத்தும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், சமீபத்தில் இந்திய வடமாநிலங்களில் இரவு நேரத்தில் மின்னும் விளக்குகள் ஒன்றன் பின்னர் ஒன்றாக வரிசையாக சென்றது. வடமாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் இந்த விளக்கமுடியாத மின்னும் விளக்கு பயணம் தொடர்ந்து, வீடியோ வெளியானது. 

India

இந்த வீடியோ பெரும் வைரலாகவே, முதலில் அங்குள்ள செய்தி நிறுவனங்கள் அதனை எலான் மிஸ்கின் சாட்டிலைட் என்று தெரிவித்தது. இதுகுறித்து, அரசு தரப்பில் ஆராய்ந்து உறுதியான தகவலை தெரிவிப்பதாக கூறப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், ஒன்றன் பின் ஒன்றாக பயணித்த மின்விளக்குகள் அடங்கிய தொகுப்பு சாட்டிலைட் தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எந்த நாட்டினை அல்லது எந்த நாட்டின் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.