இந்தியா

தொழிலாளர்களின் ரயில் பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை! மத்திய அரசு அதிரடி!

Summary:

No train ticket cost for labours

வெளிமாநில தொழிலாளர்களிடம் ரயில் பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என காங்கிரஸ் சார்பாக கூறப்பட்டதற்கு, கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை என பாஜக பதிலடி தந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மார்ச் 24 நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து பல்வேறு மாநிலங்களில் கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது . இதனை அடுத்து வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப மத்திய அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் சில சிறப்பு ரெயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக கூறப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொழிலாளர்களின் செலவை காங்கிரசே ஏற்கும் என கூறி உள்ளது.

இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள் செல்லும் சிறப்பு ரயிலில் டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதம் மானியமாக ரயில்வேயால் தரப்படுகிறது. மீதமுள்ள 15 சதவீதத்தை மாநில அரசுகள் தருகின்றன என்று காங்கிரஸ் கட்சிக்கு பாஜக பதிலடி தந்து விளக்கமளித்துள்ளது.


Advertisement