
No 2000 in ATM centers
நாட்டில் உள்ள கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை அழிக்கும் முயற்சியில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று அறிவித்திருந்தது. அதன்பின்னர் 2000 ரூபாய் நோட்டுகள், புது 500 ரூபாய் நோட்டுகளையும் அரசு அறிமுகம் செய்தது.
இந்நிலையில் அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் கடும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் புதிய ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளையும் ரிசர்வ வங்கி வெளியிட்டது.
அப்படி இருந்தும் சில்லறை தட்டுப்பாடு நிலவி வருவதால் ATM மையங்களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை நீக்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், 2000 ரூபாய் நோட்டுகளை நீக்கிய பின்னர், 500 ரூபாய் நோட்டுக்களும் ATM மையங்களில் இறுத்து நீக்கப்பட்டு குறைவான மதிப்புடைய நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement