ஏழு வருஷம்! நீதிமன்றத்திற்கு ஏன் புரியவில்லை? திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு கண்ணீர் விட்டு கதறும் நிர்பயா தாயார்!
ஏழு வருஷம்! நீதிமன்றத்திற்கு ஏன் புரியவில்லை? திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு கண்ணீர் விட்டு கதறும் நிர்பயா தாயார்!

டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் மாதம் நிர்பயா என்ற மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார் இதில் படுகாயமடைந்த அவர் சில நாட்களிலேயே உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய ராம்சிங், முகேஷ் சிங், பவன் குப்தா, அக்ஷய்குமார் சிங், வினய் ஷர்மா மற்றும் ஒரு சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் ராம்சிங் என்பவர் டெல்லி திகார் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து டெல்லி நீதிமன்றம் 18 வயது நிரம்பாத சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பிற நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் அக்ஷய் குமார் வினய் ஷர்மா முகேஷ் சிங் ஆகியோர் அடுத்தடுத்த கருணை மனுக்கள் தாக்கல் செய்தனர் இதனால் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதில் இடைக்கால தடை ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்களது கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் தற்போது பவன் குமார் என்ற குற்றவாளி தனது சட்ட நிவாரணம் பெற வழக்கறிஞர் இல்லை என கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீதிபதி சட்ட உதவி வழங்க உத்தரவிட்டார்.
இவ்வாறு தொடர்ந்து குற்றவாளிகளுக்கு தண்டனை தாமதமாகிக் கொண்டிருக்கும் நிலையில் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நீதிமன்ற வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு, இந்த வழக்கில் என் மகளுக்கு நீதி கிடைக்க ஏழு ஆண்டுகளாக அங்குமிங்குமாக அலைந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் குற்றவாளிகள் 4 பேரும் சட்டத்தில் உள்ள தந்திரங்களை பயன்படுத்தி தண்டனையை தாமதித்து செல்கின்றனர். ஆனால் இதனை நீதிமன்றம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் நான் நம்பிக்கையை இழக்கிறேன்.மரண தண்டனையை உடனே நிறைவேற்ற புதிய தன் தேதியை அறிவிக்க வேண்டும் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.