இந்தியா

உடல் உறுப்பு தானம் செய்த நிர்பயா குற்றவாளி.! இறப்பதற்கு முன் கடைசியாக செய்த காரியம்.!

Summary:

Nirbhaya convict muskesh singh donate organs

கடந்த 2012-ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடுமையாக தாக்கப்பட்டு இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 6 பேரில் ஒருவன் ஏற்கனவே தற்கொலைசெய்துகொண்டான். சிறுவன் என்ற காரணத்தை கூறி மற்றொரு குற்றவாளி விடுதலை செய்யப்பட்டான்.

இந்நிலையில், மீதமிருந்த அக்‌ஷய் தாக்குர் (31), பவன் குப்தா (25), வினய் சர்மா (26) மற்றும் முகேஷ் சிங் (32) ஆகிய நால்வருக்கும் இன்று அதிகாலை 5.30 மணியளவில் டெல்லி திகார் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஏற்கனவே இரண்டு மூன்று முறை குற்றவாளிகளின் தூக்கு தண்டனை தள்ளிவைக்கப்பட்டநிலையில், தண்டனையைத் தடுத்து நிறுத்தக் கோரி குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் நேற்று இரவு முறையிட்டார். இருப்பினும் அணைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தூக்கிலிப்படுவதற்கு முன், குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்ணீர் மற்றும் டீ ஆகியவற்றை குற்றவாளிகள் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. மேலும், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் தனது உடல் உறுப்புக்களை தானமாக வழங்கியுள்ளான், வினய் ஷர்மா என்ற குற்றவாளி சிறையில் தான் வரைந்த ஓவியங்களை சிறை அதிகாரியிடம் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement