நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பணியாளருக்கு தரப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பணியாளருக்கு தரப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?



Nirbaaya

நாட்டையே உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா குற்றிவாளிகள் நான்கு பேருக்கும் நேற்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரில், ராம் சிங் என்பவர் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மேலும், 18 வயதுக்குட்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், மீதம் இருந்த அக்‌ஷய் தாக்குர் (31), பவன் குப்தா (25), வினய் சர்மா (26) மற்றும் முகேஷ் சிங் (32) ஆகிய நால்வருக்கும் நேற்று அதிகாலை 5 . 30 மணியளவில் டெல்லி திகார் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Nirbaaya

இந்த நான்கு பேரையும் தூக்கிலிடும் பணிக்கு உத்திரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த பவன் ஜல்லாட் என்ற தூக்கிலிடும் ஊழியரை அழைத்து வந்து தனி அறையில் பாதுகாப்பாக வைத்து திகார் சிறைக்கு அழைத்து வந்துள்ளனர். 

அதன்பின்னர் அந்த நான்கு பேரையும் பவன் தூக்கிலிட்டுள்ளார். அதற்காக அவருக்கு தலா ரூ.20,000 வீதிம் ரூ.80.000 ஆயிரம் ஊதியமாக தரப்பட்டுள்ளதுடன், பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.