இந்தியா

வெளிநாட்டில் ஆண் நண்பருடன் குடும்பம் நடத்திய புதுமாப்பிள்ளை! இளம் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது நிரம்பிய பாஸ்கர் என்ற இளைஞர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து பாஸ்கரின் பெற்றோர், அதே ஊரை சேர்ந்த 25 வயதான பெண்ணை பேசி நிச்சயம் முடித்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கருக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி முதலிரவை தடுத்து வந்துள்ளார். 

இவ்வாறு ஒவ்வொரு நாளும் பல காரணங்களை கூறி புது மனைவியிடம் பழகுவதை தவிர்த்துள்ளார் பாஸ்கர். திருமணமாகி ஒரு மாதத்திற்கு மேலாக இது தொடரவே, பல கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து ஏமாற்றமடைந்த அப்பெண் தன்னுடைய பெற்றோரிடம் நடந்த விஷயங்கள் பற்றி கூறியுள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் பாஸ்கரின் பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளனர்.

 

இதனையடுத்து அவரது பெற்றோர் பாஸ்கரிடம் விசாரித்த போது மழுப்பலாக பதிலளித்துள்ளார், பாஸ்கரிடம் தொடர்ந்து இதுகுறித்து விசாரித்தபோது ஒருகட்டத்தில் உண்மையை ஒப்புக்கொண்டார் பாஸ்கர். தான் அமெரிக்காவை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவதாகவும், பெண்கள் மீது தனக்கு மோகம் இல்லை எனவும் கூறினார். இதனைக்கேட்டு இரு குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாஸ்கர் தாலி கட்டிய மனைவியை அழைத்து தனியாக பேசியதாக கூறப்படுகிறது. அதில் இருவரும் அமெரிக்காவிற்கு செல்வோம். அமெரிக்காவுக்கு சென்றவுடன் எனது ஆண் நண்பருக்கும் மனைவியாக வாழ வேண்டும் என கூறி கூடுதல் அதிர்ச்சியளித்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் வீட்டார் குண்டூர் புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


Advertisement