இந்தியா

38 வயதில் திருமணம்..! புது மனைவி..! கட்டிய தாலியில் ஈரம் கூட காயவில்லை..! அதற்குள் புதுமாப்பிளைக்கு நேர்ந்த துயரம்..! அதிர்ச்சி சம்பவம்..!

Summary:

New married man died by falling in well

கர்நாடக மாநிலம் கங்கோலி பகுதியில் வசித்து வந்தவர் லட்சுமணன் பூஜாரே. 38 வயது நிறைந்த இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவர் வசிக்கும் பகுதியில் பெரிய கிணறு ஒன்று தோண்டும் பணி நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் அந்த கிணற்றின் அருகே நின்று கொண்டிருந்த லட்சுமணன் எதிர்பாராதவிதமாக கால்தவறி உள்ளே விழுந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றின் உள்ளே இறங்கி லட்சுமணனை மீட்டு மேலே கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து லட்சுமணன் உடலை, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான சில நாட்களிலேயே புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement