சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
நண்பனை நம்பி சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்! துடிதுடித்து கதறிய காதல்மனைவி! வெளியான பகீர் சம்பவம்!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் வசித்து வருபவர் அருணாசலம் இவரது மனைவி சண்முகத்தாய். இவர்களது மகன் நம்பி ராஜன். 23 வயது நிறைந்த இவர் அங்குள்ள பால்பண்ணையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நம்பிராஜன் அதே ஊரைச் சேர்ந்த வான்மதி என்ற 19 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு சம்மதித்து விடுவார்கள் என எண்ணிய நிலையில் செல்வாக்கு காரணமாக வான்மதியின் பெற்றோர்கள் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் நெல்லை டவுன் வயல் தெருவில் வாடகை வீட்டில் குடியேறினர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நம்பிராஜனின் நண்பன் முத்துப்பாண்டியன் அவரை தொடர்பு ரெயில்வே கேட் அருகில் நிற்பதாக கூறி பெண்ணின் வீட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறி வரவழைத்துள்ளார்.

வான்மதி வேண்டாம் என்று கூறியும் அவர் புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கணவரை காணாமல் பரிதவித்து போன வான்மதி, இதுகுறித்து தனது மாமனார் அருணாசலத்திற்கு போன் செய்து கூறியுள்ளார். உடனே அங்கு வந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். பின்னர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்ட போது ரயில்வே தண்டவாளத்தில் நம்பிராஜன் தலை துண்டாகி பிணமாக கிடப்பதை கண்டறிந்தனர். மேலும், அவரது உடலில் பல்வேறு இடங்களிலும் வெட்டுக்காயங்கள் இருந்தன.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் முத்துப்பாண்டியன் பேச்சுவார்த்தைக்காக அழைத்து சென்றபோது, அங்கு வான்மதியின் உறவினர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருத்து, நம்பிராஜனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை மறைக்க தண்டவாளத்தில் போட்டு சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி , உறவினர்கள் செல்லத்துரை, முருகன் மற்றும் முத்துப்பாண்டியன் உள்பட பலரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.