நெட் தேர்வு: முழுமையாக மாறியுள்ள பாடத்திட்டம்; அதிர்ச்சியில் மாணவர்கள்.!

நெட் தேர்வு: முழுமையாக மாறியுள்ள பாடத்திட்டம்; அதிர்ச்சியில் மாணவர்கள்.!



net-exam---national-exam-centre---new-sylapus

வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இளநிலை ஆராய்ச்சியாளர், உதவி பேராசிரியர் போன்றவற்றிற்கான தேசிய தகுதி தேர்வான நெட் தேர்வை இதற்கு முன்பு வரை யுஜிசி-யும், அதன்பிறகு சிபிஎஸ்இ-யும் நடத்தி வந்தது. ஆனால் இந்த ஆண்டு நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை முதல் முறையாக நடத்த உள்ளது.

இந்நிலையில், ஜூன் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனால் இதுநாள் வரை பழைய பாடத் திட்டத்தை படித்து தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனி அவர்கள் புதிய பாடத்திட்டத்தில் படித்து தேர்வுக்கு தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுஅறிவு தேர்வு தாள்-1 உட்பட அனைத்து பாடத்திட்டமும் மாற்றப்பட்டுள்ளதாகவும், புதிய பாடத்திட்டம் யூஜிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ugcnetonline.in. ல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது புதிய பாடத்திட்டத்தை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.