தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு; கால அவகாசம் ஒரு சில தினங்களே.!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு; கால அவகாசம் ஒரு சில தினங்களே.!


national-highway-department-job-vacancies-allownced

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: 

கட்டுமானத் துறையில் இளங்கலை பொறியியல் படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2018 கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யும் முறை : 

கேட் 2018 மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தகுதியானவர்கள் www.nhai.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

வயது: 

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பணிக்கு தகுதியானவர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ள 29 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் பிப். 28, 2019 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.