இந்தியா

15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் செய்த 98 வயது பாட்டி மரணத்தால் சோகத்தில் மூழ்கிய பொதுமக்கள்!.

Summary:

narasama sulukitty old lady died


கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் மாவட்டத்தில் இருக்கும் கிருஷ்ணாபுரம் பகுதியை சார்ந்தவர் நரசம்மா. தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட இவரது முன்னோர்கள் நாடோடி வம்சத்தை சார்ந்தவர் ஆவார். 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பவகடா பகுதியில் கிருஷ்ணபுரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சுலகிட்டி நரசம்மா. இவர் தனது கிராம பகுதியில் இதுவரை 15 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் செய்துள்ளார்.

இந்த பாட்டி வசிக்கும் சுற்றுவட்டார கிராம மக்கள் பிரசவத்தின் போது இவரை அழைத்து சென்று பிரசவம் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான நாட்டு வைத்தியங்களையும், குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த நாட்டு மருந்துகளையும் தயாரித்து வழங்கி வந்துள்ளார்.

இவருக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளார். 1920 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். பெண்களுக்கு கர்ப்பகால சேவைகளை இலவச அடிப்படையில் செய்து வந்துள்ளார்.

இவரது சேவைக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு தும்கூர் பல்கலை கழகம் கவுரவ டொக்டர் பட்டம் வழங்கியது. இந்த நிலையில் உடல் நலக் குறைவால் அவர் காலமானார். இவரால் பயன்பெற்ற அனைவரும் நேரிலும், சமூகவலைத்தளங்களிலும் இரங்கல் தெரிவித்தனர்.  


Advertisement