
Namo tv telecast stopped from may 17
இந்தியா முழுவதும் தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுக்காக நாடே காத்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் பாஜக அதிகளவில் இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகிறது.
இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து மோடியின் சாதனைகளை பரப்புரை செய்யவும், பாஜக கட்சிக்கு ஆதரவாகவும் தொடங்கப்பட்டது நமோ தொலைக்காட்சி.
ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 24 மணி நேரமும் மோடியின் சாதனை, பாஜக கட்சியின் சாதனைகள், இதுகுறித்த விளம்பரங்களை மட்டுமே இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பி வந்தது. இந்நிலையில் மே 17 தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததை அடுத்து அன்று இரவே நமோ தொலைக்காட்சியின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து அந்த தொலைக்காட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, தேர்தல் முடிந்துவிட்டதால் இனி அந்த தொலைக்காட்சிக்கு வேலை இல்லை. அதான் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.
Advertisement
Advertisement