சானியா மிர்சாவின் குழந்தை பெயர் இதுவா.! இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

சானியா மிர்சாவின் குழந்தை பெயர் இதுவா.! இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?


name of sania mirsa baby

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனையான ஐதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து 2010  ஏப்ரல் மாதம்  திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை கூறி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தார்..

இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சானியா மிர்சா நேற்று அதிகாலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

இது குறித்து சோயிப் மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இதை அறிவிப்பதில் பரவசமடைகிறேன். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும், எனது சானியாவும் நலமுடன் உள்ளனர். உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி’ என்று பதிவிட்டிருந்தார் .மேலும் அவர்களுக்கு இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறிவந்தனர்.

இந்நிலையில் சானியா, சோயிப் மாலிக் தம்பதியினர்  தங்களது குழந்தைக்கு, 'இஜான் மிர்சா மாலிக்' என்று பெயர் சூட்டியுள்ளனர். இஜான் என்றால் அரபு மொழியில் ‘கடவுளின் பரிசு’ என்று அர்த்தம். தனது குழந்தையின் பெயருடன் குடும்ப பெயராக ‘மிர்சாமாலிக்’ என்று இணைத்து அழைப்போம் என்று சானியா ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.