தமிழகம் இந்தியா

எனது வாழ்க்கை நாசமாய் போனதற்கு "Musically" ஆப் தான் காரணம்! சக கைதிகளிடம் புலம்பும் அபிராமி!

Summary:

Musically app behind the abirami case

கள்ள காதலால் பெற்ற பிள்ளைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டு கள்ளகாதலுடன் தப்பித்து செல்ல முயற்சி செய்தார் அபிராமி என்ற பெண்.

நான் ஏன் இவாறு ஆனேன், சுந்தரம் உடன் தனக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது என அனைத்தையும் கூறியுள்ளார் அபிராமி. தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக நாம் பார்க்கும் வீடியோ டப்ஸ்மாஷ். இன்றைய இளைய சமுதாயம் தொடங்கி அனைவரும் இதற்கு அடிமையாகி திரிகின்றனர்.

இதுபோன்று ஒரு செயலிதான் மியூசிக்கலி. கணவன் மனைவி தொடங்கி அனைவரும் தங்களது அந்தரங்க வீடியோவை இதுபோன்ற செயலிகளில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இதன் மூலம் பாதிக்க பட்டவர்தான் இந்த அபிராமி.

தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பித்து சென்ற அபிராமியை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தான் காதலித்து திருமணம் செய்த கணவனையும் பெற்ற பிள்ளைகளையும் மறந்துவிட்டு கள்ளக்காதலனுடன் தினமும் கூத்தடித்துள்ளார் அபிராமி. தினமும் டப்ஸ்மாஷ் வெளியிடுவது, முகநூலில் போட்டோக்கள் போடுவது, ஸ்டேட்டஸ் வைப்பது என குஜாலாக வாழ்ந்துள்ளார் அபிராமி.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து யாரிடமும் பேசாமல்,சாப்பிடாமல் இருந்த அபிராமி மெல்ல மெல்ல சிறையில் இருக்கும் சகக் கைதிகளிடம் பேச தொடங்கியுள்ளார். அப்போது இந்த  பாழாய் போன மியூசிக்கலியால் தாம் நான் நாசமானேன். நானும் சுந்தரமும் சேர்ந்தது மியூசிக்கலில்  தான் என்றும் குமுறியுள்ளார்.


Advertisement