இந்தியா

ரயில் பக்கத்துல வந்திருச்சு.. பார்க்கும்போதே பதறவைக்கும் பரபரப்பு வீடியோ.. திக் திக் நிமிடங்கள்..

Summary:

60 வயது நபர் ஒருவரை போலீஸ் கான்ஸ்டபிள் ரயில் விபத்தில் இருந்து காப்பாற்றிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

60 வயது நபர் ஒருவரை போலீஸ் கான்ஸ்டபிள் ரயில் விபத்தில் இருந்து காப்பாற்றிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

மும்பை பகுதியின் தாஹிசர் (Dahisar) ரயில் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க கண்பத் சோலங்கி என்பவர் ரயில் நிலையத்தின் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு தண்டவாளம் வழியாக கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது நடைமேடை அருகே அவர் வந்த போது அவர் காலில் மாட்டியிருந்த ஷூ ஒன்று தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது.

தவறி விழுந்த ஷூவை எடுத்த அந்த நபர் நடைமேடைக்கு சென்று ஷூவை மாட்டாமல், தண்டவாளத்தின் மறுபக்கத்திற்கு சென்று ஷூவை மாட்டியுள்ளார். இந்த சம்பவத்தை நடைமேடையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், ரயில் வருவதாகவும், வேகமாக வருமாறும் அந்த முதியவரை எச்சரித்துள்ளார்.

ஆனால் இதனை காதில் வாங்கிக்கொள்ளாத அந்த முதியவர் பொறுமையாக நடந்துவருகிறார். மேலும் ரயில் அவர் அருகே வந்துவிட்டபோதும் கூடம் எந்தவித பதட்டமும் இல்லாமல் அவர் தண்டவாளத்தை கடந்துவருகிறார். ரயில் மிக அருகில் வந்துவிட்டநிலையில் கான்ஸ்டபிள் உடனடியாக அவரை மேலே இழுத்து காப்பாற்றியுள்ளார்.

ரயில் மிக அருகில் வருவதை கூட பெரிய விஷயமாக எடுத்துக்கொல்லாமல் மிக அலட்சியமாக வந்த அந்த நபரை கான்ஸ்டபிள் தனக்கு வந்த கோபத்தில் கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. மேலும் அந்த நபரை காப்பாற்றிய கான்ஸ்டபிளிற்கு மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


Advertisement