அலட்சியத்தால் நொடியில் நடந்த பதைபதைப்பு விபத்து; பதறவைக்கும் வீடியோ.!Mumbai Car Hits Women Video Viral 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பிம்பிரி சின்சிவாத், ஸ்வராஜ் சவுக் பகுதியில் நேற்று பெண் ஒருவர் சாலையை கடந்துகொண்டு இருந்தார். மொத்தமாக 3 பேர் சாலையை கடந்த நிலையில், பெண் மட்டும் சற்று இடைவெளியில் சாலையை பொறுமையாக கடந்தார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்

அச்சமயம், அவ்வழியாக அதிவேகத்துடன் பயணம் செய்த கார் ஒன்று, பெண்ணின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்மணி படுகாயமடைந்தார். இதனையடுத்து, காரை நிறுத்திய ஓட்டுநர், சற்றும் தாமதிக்காமல் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 

இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சோகம்: கணவன் கண்முன் மனைவி பரிதாப பலி.!

வீடியோ வைரல்

தற்போது பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெண்ணை கார் இடித்து தள்ளிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பெண் அலட்சியத்துடன் சாலையை கடந்தது, கார் அதிவேகத்தில் பயணம் செய்தது விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த விஷயம் குறித்து எம்ஐடிசி போசாரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து பயங்கர விபத்து; 6 பேர் பலி., 6 பேர் படுகாயம்.!