5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 5 பேர் நிலை என்ன?.. காப்பாற்றக்கூறி அபயக்குரல்.!

5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 5 பேர் நிலை என்ன?.. காப்பாற்றக்கூறி அபயக்குரல்.!


Mumbai Bandra 5 Stored Residential Apartment Collapsed 5 Trapped in the Building

அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில், இடிபாடுகளில் 5 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, கிழக்கு பந்த்ரா பகுதியில் உள்ள பெஹ்ராம் நகரில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் இன்று மாலையில் திடீரென சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. 

விபத்திற்குள்ளான கட்டிடத்தில் 5 பேர் சிக்கிக்கொண்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பாக மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவசர ஊர்தியும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.