கவரிங்கை தங்க நகையென பறித்து சென்ற கும்பல்.. போலீசிடம் சிக்கி உண்மை அம்பலமான பரிதாபம்.!

கவரிங்கை தங்க நகையென பறித்து சென்ற கும்பல்.. போலீசிடம் சிக்கி உண்மை அம்பலமான பரிதாபம்.!


Mumbai Aged Woman Jewel Robbery Police Arrested 4 Persons

மூதாட்டியை தாக்கி, அவர் அணிந்திருந்த கவரிங் நகையை தங்க நகைகள் என எண்ணி கொள்ளையடித்து சென்ற 4 பேர் கும்பல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பைகுல்லா மத்திய இரயில்வே காம்பவுண்ட் பகுதியை சார்ந்தவர் மூதாட்டி மித்திப்பாய் (வயது 78). இவர் கடந்த 3 ஆம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்த நிலையில், வீட்டிற்கு வந்த 2 பேர் குடிக்க மூதாட்டியிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். மூதாட்டி வீட்டில் சென்று தண்ணீர் எடுத்துவர சென்ற நிலையில், மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த நகையை பறித்து காரில் சென்றுள்ளனர். 

இதனால் மூதாட்டி காயமடைந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், கொள்ளை சம்பவம் உறுதியானது. இதனையடுத்து, காரின் பதிவெண்ணை வைத்து குற்றவாளிகளை கண்டறிய தொடங்கியுள்ளனர். கார் ராகுல் சிங் என்ற 27 வயது நபருக்கு சொந்தமானது என்பது உறுதியாகியுள்ளது. 

Mumbai

மேலும், கார் குஜராத் மாநிலத்திற்கு செல்வது உறுதியான நிலையில், குஜராத் மாநில காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காரை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குஜராத் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபடுக்கையில் கார் வந்துவிட, காரை இடைமறித்து காவல் துறையினர் பிடித்துள்ளனர்.

காரில் பயணம் செய்த ராகுல் சிங், அவனது கூட்டாளிகள் மணாலி பேடேவாலா (வயது 31), ஜாகிர் ஷேக் (வயது 26), ரயீஸ் ஷேக் (வயது 29) ஆகியோரை கைது செய்தனர். மேலும், மூதாட்டியின் நகைகளையும் கைப்பற்றிய நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட நகையை சோதனை செய்கையில், அது கவரிங் நகைகள் என்பது உறுதியானது. குஜராத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், மும்பை காவல் துறையினர்வசம் ஒப்படைக்கப்பட்டனர்.