ஆந்திர போலீசார் பிடியில் முகிலன்: இந்தநிலையிலும் தமிழகத்திற்காக அவர் எழுப்பும் கோஷம்! வைரலாகும் வீடியோ!

ஆந்திர போலீசார் பிடியில் முகிலன்: இந்தநிலையிலும் தமிழகத்திற்காக அவர் எழுப்பும் கோஷம்! வைரலாகும் வீடியோ!



mukilan-in-police-custody


ஆந்திரா மாநிலம், திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட சமூக செயற்பாட்டாளா் முகிலன் வேலூர் அழைத்து வரப்பட்டு, தற்போது சென்னை சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 போ் கொல்லப்பட்டனா். துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான சில முக்கிய வீடியோ ஆதாரங்களை முகிலன் வெளியிட்டாா். பிப்ரவரி 15ம் தேதி வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், அன்றைய தினம் இரவு முகிலன் மாயமானாா். 

இதனைத் தொடா்ந்து முகிலனை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி பூங்கொடி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாாிகள் விசாரித்து வந்த நிலையில், காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவரது நண்பர் தகவல் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், காணமல் போன முகிலனை ஆந்திர போலீசார் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் முகிலன், “அழிக்காதே அழிக்காதே..தமிழ்நாட்டை அழிக்காதே. நியாயமா? நியாயமா? அணுக் கழிவு மையம் அமைப்பது நியாயமா.... என முகிலன் கோஷமிட்டபடி செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.