தோனியை ஏமாற்றிய பிரபல நிறுவனம்! தொகை எவ்வளவு தெரியுமா?



MS Dhoni complaint in supreme court


பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான அமரப்பள்ளியிடம் தனக்கு பங்களா வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி ஒப்பந்தம் செய்துள்ளார். இதனையடுத்து தோனியை விளம்பர தூதராக நியமித்தது அந்த நிறுவனம். 

இதனையடுத்து 2009ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை, அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்தார் தோனி. இந்நிலையில் தோனி அந்த நிறுவனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

MS Dhoni

அந்த மனுவில், ராஞ்சியில் அமரப்பள்ளி சபாரி திட்டத்தில் பங்களா வீடு ஒன்றை முன்பதிவு செய்திருந்தேன். மேலும், அந்நிறுவனத்தின் திட்டத்திற்கு விளம்பர தூதராகவும் இருந்தேன். ஆனால் அந்நிறுவனம் விளம்பர தூதருக்கான பணத்தை தராமல், பங்களாவையும் தராமல் என்னை ஏமாற்றியுள்ளது என தெரிவித்துள்ளார். 

இதனால் அந்நிறுவனத்திடம் இருந்து 40 கோடி ரூபாய் பெற்று தருமாறு உச்சநீதிமன்றத்தில் தோனி மனுதாக்கல் செய்துள்ளார். பணம் கொடுத்த பின்னரும் அமரப்பள்ளி நிறுவனம் வீடு ஒதுக்கித் தரவில்லை என 46 ஆயிரம் பேர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.