அம்மா, அப்பா உங்க முகத்தை கூட என்னால பார்க்க முடியாது! என்னை மன்னிச்சிருங்க! அந்த வீடியோவால்... பி.எஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த மறுநாளே இளம்பெண் தற்கொலை! மாணவியின் கதறல் வீடியோ..!!!
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற 22 வயது மாணவி, அதற்கு மறுநாளே விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் செல்போனில் கிடைத்த வீடியோ, தற்கொலைக் கடிதம் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்துள்ளனர்.
அஜய்கர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஷ்டி என்கிற பிரியா மிஸ்ரா, பி.எஸ்சி இறுதி ஆண்டு தேர்வில் College Topper ஆக தேர்ச்சி பெற்றிருந்தார். இந்த மகிழ்ச்சியான செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே அவரது வாழ்க்கை சோகமாக முடிந்துள்ளது.
முதலிடம் பெற்ற மறுநாளே விஷம் அருந்திய மாணவி
லோதா பூர்வா கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் மிஸ்ராவின் மகளான பிரியா, கடந்த ஜூன் 5-ஆம் தேதி சல்பஸ் விஷ மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பெற்றும் உயிர் பிழைக்கவில்லை.
இதையும் படிங்க: உபெர் காரில் பயணம் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! "மண்வெட்டியால் வெட்டிக் கொன்னுட்டேன்".... அதிர்ச்சி வீடியோ!!!
இதையடுத்து, அவரது மரணம் குறித்து அஜய்கர் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது அவரது மொபைல் போனில் இருந்து முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்ணீருடன் பதிவு செய்த வீடியோ
விசாரணையின்போது கிடைத்த வீடியோவில், தமக்கு மிகப்பெரிய துரோகம் நடந்துவிட்டதாகவும், குடும்பத்தினரை நேரில் சந்திக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பிரியா கண்ணீருடன் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தன்னை மன்னிக்குமாறும் அவர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரியாவின் தந்தை அளித்த புகாரில், உள்ளூர் நபரான தீரேந்திரா என்ற பர்கு சிங் தாக்கூர், தனது மகளை தவறான உறவுக்கு வற்புறுத்தியதுடன், சில வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி Blackmail செய்து வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
24 மணி நேரத்தில் கைது
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 24 மணி நேரத்திற்குள் குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேலதிக ஆய்வுக்காக சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
கல்வியில் சிறந்து விளங்கி, கல்லூரி முதலிடம் பெற்ற இளம் மாணவியின் மரணம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.