மத்திய பிரதேசத்தில் பரபரப்பு.. வீடு புகுந்து பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை!

மத்திய பிரதேசத்தில் பரபரப்பு.. வீடு புகுந்து பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை!



MP BJP Admin killed

மத்தியபிரதேசம் மாநிலத்தில் பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பிப்லோட கிராமத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ராம் நிவாஸ் கும்வாத். இவருக்கு முனிவாய் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதில் ராம் நிவாஸ் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்துள்ளார்.

bjp

இந்த நிலையில் ராம் நிவாஸ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் பிப்லோடா கிராமத்தில் வசித்து வந்துள்ளார். என்ன நிலையில் நேற்று இரவு ராமநிவாஸ் மற்றும் அவரது மனைவி முனி பாய் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களது மகன்கள் இருவரும் வெளியில் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று வீட்டிற்குள் புகுந்து கூறிய ஆயுதங்களால் ராம் நிவாஸ் மற்றும் அவரது மனைவி முனிபாயை கொடூரமாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

bjp

இதனையடுத்து இன்று காலை இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், முதற்கட்ட விசாரணையில் கொள்ளை சம்பவத்தின் போது கொலை நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா எனவும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.