AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி! 4 வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து! பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி ! பதறவைக்கும் சம்பவம்...
கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் மாணிக்கம் நகரைச் சேர்ந்த ரகுபதி மற்றும் அவரது மனைவி தமிழரசி (30) தம்பதியருக்கு 4 வயதான அபர்ணா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார்.
கணவனை விட்டு பிரிந்த மனைவி
ஒரு வருடத்திற்கு முன்னர் தமிழரசியின் நடத்தை சரியில்லையெனக் கூறி ரகுபதி அவரை விட்டு பிரிந்தார். பின்னர், அதே பகுதியில் வசிக்கும் வசந்த் என்பவருடன் தமிழரசிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறி, இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.
குழந்தையின் மரணம்
நேற்று மதியம், அபர்ணா ஸ்ரீ திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாக கூறி, தமிழரசி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், மருத்துவமனையில் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இதையும் படிங்க: பேசி மயக்கிய கூலி தொழிலாளி... கர்ப்பமான 17 வயது சிறுமி.!! மீண்டும் ஒரு போக்சோ வழக்கு.!!
குற்றச்சாட்டும் கைது செய்யப்பட்ட தாய்
குழந்தையின் மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால் தமிழரசியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையின் போது அதிர்ச்சி தகவல் வெளியானது. வசந்த் கூறியதாவது, ‘உன் மகளிடம் இருந்து பிரிந்தால் உன்னுடன் சேர்ந்து வாழ்கிறேன்’ என கூறியிருக்கிறார்.
இதனை நம்பிய தமிழரசி தனது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக காவல் விசாரணையில் தெரிவித்தார். பிரேத பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்தது உறுதியாகியுள்ளது.
வசந்த் மற்றும் தமிழரசி கைது
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் தமிழரசியையும் வசந்தையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'வஞ்சம் தீர்த்த வாலிபர்கள்..' இளம்பெண்ணுக்கு கத்தி குத்து.!! 2 இளைஞர்கள் கைது.!!