கொடுமையின் உச்சம்... 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்.! அவர் கூறிய அதிர்ச்சி காரணம்.!

கொடுமையின் உச்சம்... 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்.! அவர் கூறிய அதிர்ச்சி காரணம்.!


mother killed her 6 childs

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம் மஹாத் தாலுகாவில் உள்ள காரவலி கிராமத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும், இதனால் வெறுப்படைந்த அவர், பெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தாய், தான் பெற்ற குழந்தைகள் 6 பேரையும், அடுத்தடுத்து கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.