இந்தியா

அந்த பிஞ்சு என்ன பாவம் செஞ்சது! கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருக்க, தாய் செய்த பயங்கரம்! பகீர் சம்பவம்!!

Summary:

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாரிகவலசா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வ

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாரிகவலசா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு சிந்துஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வரலட்சுமி தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 

 இந்த நிலையில் அவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இந்த நிலையில் திடீரென வரலட்சுமியின் மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும் இதுகுறித்து யாருக்கும் எந்த தகவலும் தெரிவிக்காமல் வரலட்சுமியே சடலத்தை புதைத்துள்ளார்.

     

பின்னர் தனது கணவருக்கு போன் செய்து, குழந்தை இறந்துவிட்டதாக மிகவும் சாதாரணமாக கூறியுள்ளார். இதைக்கேட்டு துடிதுடித்துப் போன அவர் சந்தேகமடைந்து இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் கிராமத்தினரும் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது குழந்தை இடையூறாக இருந்ததால், அவரைக் கொன்றதாக வரலட்சுமி கூறியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கேட்டு கிராமத்தினர் பெரும் ஆவேசம் அடைந்துள்ளனர். பின்னர் போலீசார் வரலட்சுமி மற்றும் ஜெகதீஷ் இருவரையும் கைது செய்தனர்.
 


Advertisement