மறுபடியும் பிறந்த பெண் குழந்தை..! பிறந்து 2 நாட்களில் துடிக்க துடிக்க தாய் செய்த கொடூரம்..

மறுபடியும் பிறந்த பெண் குழந்தை..! பிறந்து 2 நாட்களில் துடிக்க துடிக்க தாய் செய்த கொடூரம்..


Mother killed 2 days old baby in Mathiya pradesh

இரண்டாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்ற தாயே குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் ஷஜாபூர்  மாவட்டத்தில் உள்ள அம்ஹோரியா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சு (26).

மஞ்சுவிற்கு முதலாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமான மஞ்சு இந்த முறை ஆண் குழந்தை பிறக்கும் என்ற ஆசையோடு இருந்துள்ளார். ஆனால், கடந்த புதன்கிழமை மஞ்சுவிற்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

Crime

இந்நிலையில் வீட்டிற்கு சென்ற மஞ்சு குழந்தை பிறந்து இரண்டே நாட்கள் ஆன நிலையில் கூர்மையான ஆயுதத்தால் குழந்தையின் தலை மற்றும் வயிற்று பகுதியில் பலமாக தாக்கியுள்ளார். வலியால் துடித்த குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மஞ்சுவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.