பிள்ளைகள் கண்முன் தாய் கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. கொள்ளை கும்பலால் அரங்கேறிய பெருங்கொடுமை.!



Mother Gang-Raped in Front of Son During Robbery at Farm in Madhya Pradesh

கொள்ளை கும்பல் பிள்ளைகளின் கண்முன் தாயை வன்கொடுமை செய்த பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

தற்காலிக குடிசை:

Gang-Raped in Front of Son: மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி மாவட்டம், பட்நகரில் பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள் பாதுகாவலர்களாக வேலை பார்த்து இருந்துள்ளனர். கடந்த 18ம் தேதி நள்ளிரவு நேரத்தில் 30 வயதுடைய பெண்மணி, அவரின் கணவர், 12 வயதுடைய மகன் ஆகியோர் பண்ணையின் தற்காலிக குடிசையில் இருந்துள்ளனர்.

இதையும் படிங்க: 9 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 10, 12 வயது சிறார்கள்.. வாயைப்பொத்தி அரங்கேறிய கொடூரம்.!

Gang Raped

கூட்டுப்பாலியல் பலாத்காரம்:

அச்சமயம் அங்கு வந்த ஐந்து பேர் கும்பல், தம்பதிகளை எழுப்பி பெண்ணின் கணவரை துப்பாக்கி முனையில் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். ஒருசிலர் அங்கிருந்த காற்றாலை மின்சார வயரை திருடி இருக்கின்றனர். பிறர் பெண்ணின் மீது தாக்குதல் நடத்தி, பெண்ணையும் அவரின் மகனையும் புதர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மகனின் கண்முன் துப்பாக்கி முனையில் 3 பேரால் பெண்மணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் கொள்ளை கும்பலுக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீட்டில் உறங்கியபோது நடந்த கொடுமை.!