இந்தியா

10-வகுப்பு தேர்வில் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்ற தாய், மகன்! பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்!

Summary:

mom and son passed 10 th exam

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப் குராவ். இவருக்கு பேபி குராவ் என்ற பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு சதானந்த் என்ற 16 வயது மகன் இருந்துள்ளார். பேபி குராவ் 10 ஆம் வகுப்பு முடிக்காத நிலையில் சிறு வயதிலேயே அவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

பிரதீப் குராவ்- பேபி குராவ் தம்பதியின் மகன் சதானந்த் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்புத் தேர்வை எழுதியுள்ளார். அதேபோல் படிப்பின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் அவரது தாய் பேபியும் இந்த முறை 10-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வை எழுதியிருந்தார்.

இந்தநிலையில் அங்கு தேர்வு முடிவுகள் கடந்த 29-ம்தேதி வெளியாயினது. அதில்  பேபி குராவ் 64.40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். அவரது மகன் சதானந்த் 73.20 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார். புனே மாவட்டத்தில் தாயும், மகனும் ஒரே நேரத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சம்பவம் அந்த பகுதியில் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து உயர்க்கல்வி படிப்பு படிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வைரலானதை அடுத்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவரை விட அவரது தாய் பேபி குராவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement