நேற்று ஒரே நாள் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது.! மகிழ்ச்சியில் பிரதமர் மோடி.!

நேற்று ஒரே நாள் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது.! மகிழ்ச்சியில் பிரதமர் மோடி.!



modi-talk-about-vaccine

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனாவிலுருந்த தம்மை காப்பாற்றிக்கொள்ள மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது. 

இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. உலக அளவில் வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 80 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதிகப்படியான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள கடினமாக உழைக்கும் முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள். Well done India!" என தெரிவித்துள்ளார்.