
modi talk about tamil
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஐ.ஐ.டி.) 56-வது பட்ட மளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார்.
இதற்காக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பட்ட மளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழின் பெருமை பற்றி அமெரிக் காவில் பேசியதை குறிப்பிட்டார். உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்து கொண்டு இருப்பதாக மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
We live, we learn. pic.twitter.com/f283JqybqH
— Narendra Modi (@narendramodi) September 30, 2019
அதைத்தொடர்ந்து ஐ.ஐ.டி. விழாவில் பேசும்போதும், உலகிலேயே பழமையான மொழியான தமிழ் மொழியின் தாயகமான தமிழ்நாட்டில் நாம் இருக்கிறோம் என்று கூறினார். சமீபத்தில் ஐ.நா.வில் பேசும்போது, “தமிழ்மொழி பற்றியும் ‘யாதும் ஊரே’ என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகளை சொன்னதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசிய அவர், உலகம் முழுவதும், இந்தியர்கள் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் சாதனை படைத்து வருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் ஐஐடியின் முன்னாள் மாணவர்கள். நீங்கள் எங்கு பணி செய்தாலும், இந்தியாவை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement