அரசியல் இந்தியா

ஓம் மற்றும் பசு என்ற சொல்லைக் கேட்டதுமே சிலருக்கு பயம்: பிரதமர் மோடி பேச்சு!

Summary:

modi talk about om and cow


உத்தரபிரதேச மாநிலம், மதுராவில் கால்நடைகளை கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். அப்போது ராதே.. ராதே.. எனக் கூறி தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ருவாண்டா நாட்டில் கிராம மக்களுக்கு அரசே பசுவை இலவசமாக வழங்குவதாகவும், அந்த பசு ஈன்றும் முதல் பசு கன்றுக்குட்டியை கால்நடை இல்லாத மற்றவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதன்படி அனைவருக்கும் இலவசமாக கால்நடைகள் விநியோகிக்கப்படுகிறது என கூறினார்.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளால், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அந்த பிளாஸ்டிக்கிற்கு, தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 2022க்குள், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், முற்றிலும் ஒழிக்கப்படும். இதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இந்தியாவில் ஓம் மற்றும் பசு என்ற வார்த்தைகளை கேட்டாலே சிலர் பயப்படுவதாகவும், மின்சார அதிர்ச்சியை போல உணர்வதாகவும் தெரிவித்தார். மேலும் ஓம் மற்றும் பசு என்ற வார்த்தைகள் இந்தியாவை 16ஆம் நூற்றாண்டுக்கு அழைத்து செல்லும் என பலர் அஞ்சுவதாகவும் மோடி தெரிவித்தார்.
 


Advertisement