ஏப்ரல் 5 ஆம் தேதி அனைவரும் இரவு 9 மணிக்கு இதனை செய்யுங்கள்! பிரதமர் மோடி வேண்டுகோள்!



modi request to people


சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது நாளுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பரவுவதை தடுக்க, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 23 ஆம்தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றி, கொரோனாவை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

இந்தநிலையில் இன்று காலை 9 மணிக்கு மீண்டும் காணொலி மூலம் மக்களிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளப்போவதாக நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் பிரதமர் மோடி.

இந்தநிலையில் இன்று காலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ள காணொளியில், கொரோனாவை தடுக்க அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளனர் என மோடி தெரிவவித்தார்.

அதில், ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி. இந்திய மக்கள் ஊரடங்கிற்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனால் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும்.வீட்டின் நான்கு மூலைகளிலும் வெளிச்சத்தை ஏற்படுத்தும் வகையில் விளக்குகளை ஏற்படுத்த வேண்டும். யாரும் தெருவுக்கு வந்து இதனை செய்ய வேண்டாம். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.