ரயில் கழிவறையில் வீசிய துர்நாற்றம்..! ஓடும் ரயிலின் கழிவறையில் பல நாட்களாக சடலமாக கிடந்த புலம் பெயர் தொழிலாளி..! சுத்தம் செய்ய சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!



migrant-worker-likely-deceased-for-days-found-in-toilet

புலம்பெயர் தொழிலாளர் ஒருவரின் சடலம் ரயிலில் உள்ள கழிவறை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் வேலை இழந்து, சாப்பாடு இல்லாமல் சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. சிலர் பசியால் இறக்கும் சம்பவங்களும் அங்கங்கே நடந்துவருகிறது.

இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கூலிவேலை பார்த்துவந்த மோகன்லால் ஷர்மா(38) என்ற நபர் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் சிரமப்படுவந்துள்ளார். இதனிடையே அரசு ஏற்பாடு செய்த சிறப்பு ரயில் மூலம் மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார்.

சிறப்பு ரயில் மும்பையில் இருந்து கிளம்பி உத்திரபிரதேசத்தில் உள்ள ஜான்சி ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளது. பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறங்கிய பின்னர் ரயில்வே தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி கொண்டு ரயிலை சுத்தம் செய்வது வழக்கம்.

Lock down

அந்த வகையில் ரயில் பெட்டியில் உள்ள கழிவறை ஒன்றை சுத்தம் செய்ய சென்றபோது உள்ளே ஆண் ஒருவரின் சடலம் சற்று அழுகிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பதை அடுத்து ரயில் கழிவறையில் இறந்து கிடந்தது மோகன்லால் ஷர்மா என்பதை அவரது உறவினர் ஒருவர் மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் சடலமாக கிடந்த மோகன்லால் ஷர்மாவின் பையில் இருந்து 28 ஆயிரம் பணம், ஒரு சோப்பு மற்றும் சில புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஷர்மா பசிக்கொடுமையால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடைபெற்றுவருகிறது.

மேலும், இறந்துபோன ஷர்மாவுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா எனவும் சோதனை நடைபெற்றுவருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.