ரயில் பெட்டியில் ஏன் இந்த மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கிறது தெரியுமா? இனி அர்த்தம் தெரிஞ்சிட்டு ஏறுங்கள்!
ரயில் பெட்டியில் ஏன் இந்த மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கிறது தெரியுமா? இனி அர்த்தம் தெரிஞ்சிட்டு ஏறுங்கள்!

இந்தியாவில் மிகவும் பிரதான போக்குவரத்துகளில் ஓன்று ரயில். தினமும் பல லட்சம் பேர் தங்கள் அன்றாட பணிக்கு சென்றுவர ரயிலை சார்ந்துள்னனர். 1853 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ரயில் சேவை 1951 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. மேலும், முதல் முறையாக தனியார் ரயில் சேவையையும் IRCTC தற்போது அறிமுகம் செய்துள்ளது.
ரயில்வே துறை அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை செய்துவருகிறது. அந்த வகையில் சில ரயில் பெட்டிகளில் மட்டும் மஞ்சள் நிற கோடுகள் சாய்வாக போடுபட்டிருக்கும். அந்த கோடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? வாங்க பாக்கலாம்.
பொதுவாக ரயில்களில் ரிசர்வேஷன் மற்றும் அன்ரிசர்வேஷன் என இரண்டு வகை இருக்கும். அதாவது முன் பதிவு செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத என்பது இதன் பொருள். முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் மட்டுமே இந்த மங்கள் நிறத்திலான கோடுகள் இருக்கும்.
ரயில் பயணிகள் அவசரமாக வந்து ஏறும்போது அவர்களால் படித்து பார்த்து ஏற இயலாது. மேலும், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு பயன்படும் வகையில்தான் இந்த மஞ்சள் நிற கோடுகள் போடப்பட்டுள்ளது.
இத்தகைய மஞ்சள் நிற கோடுகள் இருந்த அவர் முன் பதிவு செய்யப்படாதவை என்று அர்த்தம். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இந்த கோடுகளை காண இயலாது.