இந்தியா

தாய் இறந்தநிலையில், தந்தையுடன் வசித்து வந்த திருமணமான இளம்பெண் தற்கொலை! கையில் எழுதியிருந்த உருக்கமான வார்த்தைகள்!

Summary:

Married girl commit suicide in father house

ராஜஸ்தான் மாநிலம் ஷிப்ட் மாவட்டம் தகத்கர் நகரில் உள்ள மகாவீர் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் செவந்தி. 23 வயது நிறைந்த இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கெய்க்ரா  கிராமத்தைச் சேர்ந்த நர்பத் மேக்வால் என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

 இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செவந்தியின்  தாயார் உயிரிழந்தார். அப்பொழுது தாய் வீட்டிற்கு வந்த அவர், சகோதரனும் தனியாக வசித்து வந்தநிலையில் கடந்த ஒரு மாதமாகவே தனியாகவுள்ள தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலையின் காரணமாக அவரது தந்தை வெளியே சென்றுவிட்டு, வீடு திரும்பிய போது செவந்தி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனை கண்ட அவரது தந்தை பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் செவந்தியின் உள்ளங்கையில், என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா. என் கணவர் வீட்டிற்கு என்னை அனுப்பாதீர்கள். ஐ லவ் யூ அப்பா என எழுதியிருந்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார்,  செவந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான ஒரு வருடத்திலேயே செவந்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement