போர்க்களமான திருமண விருந்து இதுதான் விஷயமா; வைரலாகும் வீடியோ.!marriage-function-fight---thelungan

தெலுங்கானாவில் திருமண விருந்தில் மட்டனுக்கு பதில் சிக்கன் பரிமாறியதால் சினிமாவை மிஞ்சும் சண்டை காட்சிகள் நடந்துள்ளது.

சமீபத்தில் திருமண விருந்தில் நடந்த போர்க்களமான சண்டைக்காட்சி வைரலாகி வந்தது. ஆனால் அது தொடர்பான முழு விபரங்களும் தெரியவில்லை. இந்நிலையில் தற்போது அந்த சம்பவம் தெலுங்கானாவில் நடைபெற்றது என்பது தெரிய வந்துள்ளது. அதாவது திருமண விருந்தில் மட்டன் உணவு பரிமாறப்படும் என்று ஒரு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது ஆனால் விருந்தில் சிக்கன் உணவு பரிமாறப்பட்டதாக தெரிகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 100 க்கும் மேற்பட்ட சேர்கள் உடைந்ததாகவும் 10 க்கும் மேற்பட்டோருக்கு  பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெலுங்கானாவில் உள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.