தூக்குடா மாப்பிள்ளைய... அரசு வேலை மீதான மோகம்... துப்பாக்கி முனையில் நிகழ்ந்த திருமணம்!! நடந்தது என்ன.?

தூக்குடா மாப்பிள்ளைய... அரசு வேலை மீதான மோகம்... துப்பாக்கி முனையில் நிகழ்ந்த திருமணம்!! நடந்தது என்ன.?



Marriage did by the gun point in Bihar

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கௌதம் குமார்(26). இவருக்கு சமீபத்தில் பீகார் அரசு தேர்வாணையத்தில் வெற்றி பெற்றதால் அரசு வேலை கிடைத்துள்ளது. இதனையடுத்து கௌதம் பணி நியமன ஆணை வாங்குவதற்காக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். வெளியே சென்ற கௌதம் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது காணமல் போன கௌதமை போலீசார் திருமண கோலத்தில் கண்டு பிடித்துள்ளனர். போலீசாரை கண்டதும் மணமேடையில் இருந்த கௌதம் அழுது கொண்டே ஓடி வந்து தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை கூறி கதறியுள்ளார்.

Bihar

அதாவது மணமகளின் தந்தை தன்னை கடத்தி வந்து துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்து வைத்ததாக போலீசாரிடம் கூறினர் கௌதம். போலீசார் மணமகளின் தந்தையிடம் விசாரணை நடத்தியதில் தனது மகளுக்கு திருமணம் செய்தால் அரசு வேலையில் இருக்கும் பையனை தான் திருமணம் செய்ய முடிவு எடுத்ததாகவும், அதற்காக தான் கௌதமை கடத்தி வந்து திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளார்.

அதனையடுத்து கௌதமை மீட்ட போலீசார் இந்த திருமணத்தை ரத்து செய்வது குறித்து நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.