பகலில் படிப்பு.! மாலையில் பாத்திரம் தேய்க்கும் வேலை.! இரவில் கால் சென்டரில் வேலை.! போராடி வென்ற ஆட்டோ ஓட்டுனரின் மகள்.!

உத்தர பிரதேசத்தின் குஷிநகரை சேர்ந்தவர் மன்யா சிங். ஆட்டோ ஓட்டுனரின் மகளான இவர் மிஸ் இந்தியா 2020-ஆம் ஆண்டின் ரன்னர் பட்டம் வென்றுள்ளார். அவரது தந்தை ஆட்டோ ஓட்டி கொண்டுவரும் பணத்தாலேயே மன்யா சிங் குடும்பம் நடைபெற்று வந்தது. கடுமையான உழைப்பாளியான ஆட்டோ ஓட்டுநரின் மகளான இவர் உழைப்பின் அனுபவங்கள் இகுறித்து ன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மன்யா சிங் பகல் நேரங்களில் பள்ளி சென்று படித்தும், மாலை நேரங்களில் பாத்திரம் தேய்த்தும், இரவு நேரங்களில் கால் சென்டரில் வேலை பார்த்தும் பணம் சம்பாதித்துள்ளார். ஒரு காலத்தில் இரவு சாப்பிடாமல் கூட தூங்கியுள்ளார். தனது குழந்தை பருவத்தில் ஏராளமான கஷ்டங்களை கடந்து வந்துள்ளார் மன்யா சிங். அவர் விரும்பிய புத்தகங்கள் மற்றும் உடைகள் அவருக்கு கிடைக்கவில்லை என்பதை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அவர் தன்னுடைய மேல்நிலைப் பள்ளி படிப்பில் சிறந்த மாணவிக்கான விருது வென்றுள்ளார். பள்ளி கட்டணம் செலுத்தவோ, புத்தகங்களை பெறவோ கூட வசதியில்லாமல் வாழ்க்கையில் கடுமையாக போராடியதை குறிப்பிட்டுள்ளார். இறுதியாக வாழ்க்கையில் வெற்ற பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை உலகிற்கு காட்டவே மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றதாக மன்யா சிங் கூறியுள்ளார்.