பிரார்த்தனை செய்யப் போன இடத்தில் பாதிரியாரால் 14 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்! அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி உண்மை... நெஞ்சை பதற வைக்கும் பின்னணி..!!!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், கத்தோலிக்க பாதிரியார் சிப்ரியன் பின்டோவை போலீஸார் கைது செய்துள்ளனர். வாலென்சியாவில் உள்ள புனித வின்சென்ட் ஃபெரர் தேவாலயத்தில் பாதிரியாராகப் பணியாற்றிய அவர் மீது, பல சிறுவர்கள் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரைத் தேடி வந்த நிலையில் ஹாசன் மாவட்டத்தில் கைது செய்தனர்.
நண்பர்களிடம் தெரிவித்த சிறுவன்; வெளிச்சத்துக்கு வந்த புகார்
தேவாலயத்துக்குப் பிரார்த்தனை செய்யச் சென்றபோது பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்ததாக 14 வயது சிறுவன் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்ட மேலும் நான்கு சிறுவர்களும் தங்களுக்கு இதேபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாதிரியார் மீதான புகார் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
பெற்றோருடன் காவல் ஆணையரிடம் புகார்
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனும் அவனது பெற்றோரும் மங்களூரு மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், பாதிரியார் சிப்ரியன் பின்டோ மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானதாகக் கூறப்படும் நிலையில், அவரைக் கண்டுபிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
ஹாசன் மாவட்டத்தில் கைது; நீதிமன்றக் காவல்
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஹாசன் மாவட்டம் சகலேஷ்புராவில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பாதிரியாரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், மங்களூரு தெற்கு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அறுவை சிகிச்சை பிறகு அடுத்தடுத்து இறந்த 2 பெண்கள்! தொடரும் மர்மம்... பகீர் சம்பவம்..!!!