தோழியை சிறைவைத்து 2 வருடங்களாக பாலியல் கொடுமை.! நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த கொடூரன்.!

தோழியை சிறைவைத்து 2 வருடங்களாக பாலியல் கொடுமை.! நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த கொடூரன்.!


man tortured young girl last two years

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெங்களூரு கங்கமனகுடி பகுதியில் 27 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்த நிலையில் தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், இந்த நிலையில் அப்பெண்ணுக்கு சில வருடங்களுக்கு முன்பு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுஇருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்தநிலையில் 2 வருடங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை, அவரது நண்பர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் வைத்து இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பெண்ணை அவரது வீட்டிலேயே கட்டாயப்படுத்தி தங்கவைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில் தனது வீட்டில் சிறை வைத்திருந்த அப்பெண்ணை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது நண்பர் விடுத்துள்ளார். 2 வருடங்களாக கொடுமைப்படுத்தியது போதாமல், அப்பெண்ணை மீண்டும் தொடர்புகொண்டு நான், எனது நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கி உள்ளேன். அந்த கடனை அடைப்பதற்காக நீ அவர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புக்கர் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.