காதல் கைகூடியும் திருமணத்திற்கு முன் தற்கொலை செய்துகொண்ட காதலன்! வெளியான அதிர்ச்சி காரணம் - TamilSpark
TamilSpark Logo
இந்தியா சமூகம் காதல் – உறவுகள்

காதல் கைகூடியும் திருமணத்திற்கு முன் தற்கொலை செய்துகொண்ட காதலன்! வெளியான அதிர்ச்சி காரணம்

ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொள்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு மணமகன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் டொமினிக் ரொசாரியோ. 25 வயதான இவர் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனக்கு நெருக்கமான 22 வயதான வரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

காதலை துவங்கும் பொழுது இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்பு தான் திருமணம் செய்து கொள்வது என இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துள்ளனர்.

ஆனால் அவருடைய காதலியோ கடந்த சில மாதங்களாகவே திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உண்டான டோமினிக் வேறுவழியின்றி கடந்த ஜூன் ஒன்றாம் தேதி திருமணம் கொள்ள ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தாலி கட்டுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே டொமினிக் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. 

டொமினிக்கன் தற்கொலைக்கு அவரது காதலி தான் காரணம் என டொமினிக்கின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். அந்தப் பெண் கொடுத்த அழுத்தத்தினால்தான் தங்களது மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசிலும் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo