காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
கொரோனா, கொரோனா..! கூவி கூவி விற்பனை செய்த நபர். இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்..!

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4000 கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
தமிழ்நாடு உட்பட காஷ்மீர், டெல்லி, பெங்களூர், தெலுங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து தங்கள் பாதுகாத்துக்கொள்ள முக கவசம் அணியுமாறும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுவருகிறது.
இதனால் முகக்கவசம், கை கழுவும் திரவங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒரு மார்க்கெட் பகுதியில் வியாபாரி ஒருவர் முகத்திற்கு அணியும் மாஸ்குகளை கொரோனா கொரோனா என கூவி கூவி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்கிவருகிறது.
இந்த வீடீயோவை இணையாயத்தில் பதிவு செய்துள்ள நபர் இதெல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கும் என குறிப்பிட்டுள்ளார். அவர் சொன்னபடி, இதுபோன்ற காட்சிகளை நமது ஊரில் மட்டும்தான் பார்க்க முடியும்.
It happens only in India! 😷🤦♂️ #CoronaVirus pic.twitter.com/V3jxaJqphQ
— T.S.Suresh (@editorsuresh) March 10, 2020